அமாவாசை நாளில் இப்படி தான் செய்ய வேண்டும்

அமாவாசை நாளில் இப்படி தான் செய்ய வேண்டும்

அமாவாசை நாளில் முதியோர்களை வணங்கி வந்தால் குடும்பம் தழைக்கும் பித்ருக்கள் சாபம் நீங்கும் என்பது நம் முன்னோர்கள் நமக்குச்சொல்லிவிட்டு சென்ற தாரக மந்திரம். அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை என்றால் கேட்கவே வேண்டாம் நம்முன்னோர்களை வேண்டினால் சகலமும் கிட்டும்

இந்நாள் முழுவதும் உணவு உண்ணாமல் இருந்து மாலையில் விநாயகரை அர்ச்சித்து வழிபட்டு இனிப்பினை படைக்க வேண்டும். அதன்பின் இரவு 08:05க்கு மேல் சந்திரனைத் தரிசித்து பின் உண்ண வேண்டும். விரதம் இருக்க இயலாதவர்கள் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று விநாயகரை அர்ச்சித்து வழிபட்டு அருளைப்பெறலாம். இந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி சூரியன் மிதுன ராசியிலிருந்து கடகராசிக்கு மாறி ஆடி மாதம் பிறந்தது.

அன்றைய தினம் அமாவாசையும் சேர்ந்தது. மாதப்பிறப்பு. தக்ஷிணாயனம், அமாவாசை என்று மூன்று புண்ணிய காலங்கள் இணைந்த ஆடிப் பண்டிகையை இவ்வாண்டு கண்டு களித்தோம். மேலும், ஆடிமாதம் 31ம் தேதி (ஆகஸ்ட 16ம்தேதி இன்று ) மீண்டும் அமாவாசை வருகிறது. இப்படி இரண்டு அமாவாசை வருகிறபோது, ஆடிஅமாவாசை எனும் சிறப்பு எதற்கு உண்டு ? எல்லோருக்கும் ஏற்படும் ஐயம்தானே அது ஏன் நம்முன்னோர்களை வணங்கி வழிபடுவதால் நமக்கு அத்தகைய கேள்வி எழுகிறது.

ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசையோ, பவுர்ணமியோ வந்தால் முதலில் வருவதை விட்டுவிட்டு, பின்னதையே சிறப்புடையதாக ஏற்கவேண்டும் என்கிறது சாஸ்திரம் என்கிறார் ஸ்ரீதர் சாஸ்திரிகள். ”பூர்வம் த்யக்த்வா பரம் க்ராஹ்ய” என்பது வாக்கியம். இதன்படி, பூர்வம் என்ற முதலாவதை ”த்யக்த்வா” விட்டு, பரம் என்கிறதான பின்வருவதை “க்ராஹ்ய” எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.

எனவே, ஆடி முதல் தேதியில் வரும் அமாவாசையை சாதாரணமாக தர்ப்பணம் செய்யும் நாளாகவும், ஆடி 31ம் தேதி வரும் அமாவாசையை சிறப்புடைய ஆடி அமாவாசையாகக் கொண்டு, கடல் ஆறு குளக்கரைகளில் தர்ப்பணம், தானம் முதலியன செய்து முன்னோரின் ஆசியைப்பெறுவோமாக!.  திருச்சியில் நீர் நிலைகளுக்கா பஞ்சம் எங்கே அம்மா மண்டபமா அய்யாளம்மன் படித்துறையா நீர் சற்று அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. ஆகவே கவனமாக ஆற்றில் காலை வைக்கவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision