திருச்சியில் 5 ரவுடிகள் கைது - 450 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரவுடி, கேடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்கும், பொருட்டு 5 தனிப்படைகள் உருவாக்கப்பட்டது. இத்தனிப்படைகள் நேற்று முன்தினம் (19.08.2023) 5 ரவுடி மற்றும் கேடிகளை கைது செய்தும், மேலும் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை விற்ற 2 நபர்களை கைது செய்தும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண் குமார், பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனி தொலைபேசி, 9487464651 எண்ணில் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள். நேற்று (20.08.2023)-ஆம் தேதி காலை மேற்கண்ட எண்ணிற்கு தனிநபர் ஒருவர் தொடர்பு கொண்டு துவாக்குடி காவல் நிலைய சரசு எல்லைக்குட்பட்ட சிவாஜி நகர்,
அசூர் பகுதியில் உள்ள வீட்டில் குட்கா அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கொடுத்த தகவலின் அடிப்படையில், திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் மற்றும் துவாக்குடி காவல் ஆய்வாளர்களை விரைந்து அனுப்பி அதிரடிவேட்டை மேற்கொண்டதில் சுமார் 40 மூட்டைகளில் (450 கிலோ, குட்கா பாக்கெட்கள்) கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண் குமார், சம்ப இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision