வாய்ஸ் அறக்கட்டளையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி மையம் திறப்பு விழா

வாய்ஸ் அறக்கட்டளையில்  மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி மையம் திறப்பு விழா

சிறுகனூர் வாய்ஸ் அறக்கட்டளை மனிதவள மேம்பாட்டு பயிற்சிமையத்தில், எனேபிள் இந்தியா உதவியுடன், கர்வ்சே மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு பயிற்சிமையம் துவக்கப்பட்டது. 

01.03.2022 அன்று, 70 மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திலிருந்து 52 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். வாய்ஸ் அறக்கட்டளை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஜே.ப்ரீத்தி வரவேற்றார். 

எனேபிள் இந்தியா இயக்குனர் கருதுறைவழங்கினார் . "பெருமையுடன்" மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு பயிற்சி நோக்கம் பற்றி ஆண்டனி தன்ராஜ் விளக்கமளித்தார்.

நேஷனல் கல்லூரி துணைவரும், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக்ஸ் தலைவருமான முனைவர்.பிரசன்னா பாலாஜி சிறப்புரையாற்றினார், டால்பின் சிறப்பு பள்ளி இயக்குனரும் பிரவீனா, மனிதம் சமூகப்பணி நிறுவனர் ஆர்.தினேஷ், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டாளர் ஆர்.இந்துமதி வாழ்த்துறைவழங்கினார்.

விவசாயத்திலும் மாற்றுத்திறனாளிகள் சாதிக்கலாம் என்பது பற்றி வாய்ஸ் அறக்கட்டளை குழுவினர் .ரெ.கவிதா, .க.விஜய், பெ.சிலம்பரசன் விளக்கினார். 

விவசாயம் (பால் பண்ணை, மண்புழு உரம் தயாரித்தல், ஆடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, செம்மறி ஆடு வளர்ப்பு, வணிக மலர் வளர்ப்பு, வணிக தோட்டக்கலை, மருத்துவம் மற்றும் நறுமண தாவரங்கள் பயிரிடுதல்), கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் (மெழுகுவர்த்தி தயாரித்தல், வீட்டில் தயாரிக்கப்பட்ட அகர்பத்தி, அகர்பத்தி மேக் மற்றும் கேன் கிராஃப்ட்), எலக்ட்ரானிக்ஸ் (செல்லுலார் ஃபோன் ரிப்பேர், குளிர்பதன மற்றும் ஏர் கண்டிஷனிங், டிவி டெக்னீசியன்), கட்டுமானம் (தச்சு, கொத்து மற்றும் கான்கிரீட்)

மாற்றுதினாளிகள் குரல் என்ற வானொலி அழைப்பு நம்வானி பற்றி வாய்ஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் ஜோ.நீட்டு விவரித்தார். வாய்ஸ் அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு திட்டங்கள் ஒருங்கிணைப்பாளர்ஆர்.விக்டோரியா நன்றி தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO