கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்தவர்களை திருப்பி அனுப்பிய டிஆர்ஓ - இளைஞர்கள் வாக்குவாதம்

கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்தவர்களை திருப்பி அனுப்பிய டிஆர்ஓ - இளைஞர்கள் வாக்குவாதம்

திருச்சி மாநகரில் இன்று 18 வயதில் இருந்து 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல் அனுப்பப்பட்டது. இதனடிப்படையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்க திருமண மண்டபம் மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்ட அலுவலகங்களில் தடுப்பூசி காலை 7 மணியிலிருந்து 10 மணிவரை செலுத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

அதில் கூடுதலாக ஒரு 16 வகை களப்பணியாளர்களுக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படும் என தகவல் தெரிவிக்கபட்டிருந்தது. காலை10 மணி வரை இந்த முகாம்களில் யாரும் பெரிதளவில் வரவில்லை. ஆனால் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் திடீரென ஆர்வமுடன் இளைஞர்கள் ஏராளமானோர் வரத் துவங்கினர்.

உடனடியாக கூட்டத்தை சமாளிப்பதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமார் நேரில் வந்து வங்கி ஊழியர்கள்,மருந்து விற்பனையாளர்கள், ஹோட்டலில் பணிபுரிபவர்கள், காய்கறி விற்பவர்கள், மின்சார வாரியத்தில் பணி புரிபவர்கள் என தற்போது கோவிட் தொற்று ஊரடங்கு காலத்தில் பணியில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கி அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உத்தரவிட்டார். 

மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து வீட்டிற்கு செல்ல அறிவுறுத்திய இளைஞர்கள் சிலர் அவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து  மத்திய அரசும், தமிழக அரசும் கோவிட் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறு அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஆனால் இங்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என வரும் போது அவற்றில் உங்களுக்கு இப்போது இல்லை என குறிப்பிடுவது என்ன நியாயம் என்ற கேள்வியும் எழுப்பினர்.

இந்த முகாமில் தடுப்பூசி போட்டு கொள்ள வந்தவர்களள் யாரும் முன் பதிவு செய்யாதவர்கள் விழிப்புணர்வுக்காக நடத்தபட்ட தடுப்பூசி முகாம் என்பது குறிப்பிடதக்கது. திருச்சி மாவட்டத்தில் 18 வயதில் இருந்து 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் 50,000 கையிருப்பில் உள்ளதாகவும், 45 வயதிற்கு மேற்பட்டவருக்களுக்கான தடுப்பூசிகள் 11 ஆயிரம் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ்  தகவல் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx