திருச்சி எம்ஏஎம் கல்லூரியில் முதுநிலை நிர்வாகவியல் துறை மன்ற தொடக்க விழா

திருச்சி எம்ஏஎம் கல்லூரியில் முதுநிலை நிர்வாகவியல் துறை மன்ற தொடக்க விழா

திருச்சி சிறுகனூரில் அமைந்துள்ள எம்ஏஎம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கனா காண துணிக என்ற தலைப்பில் முதுநிலை நிர்வாகவியல் துறை மன்ற தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் முனைவர் சூசன் கிறிஸ்டினா தலைமை உரையில் இலத்தீன் சொல்லான zera-club  விதை குழு,Moneta பணம் முதலீட்டை ஊக்கப்படுத்துவதன் மற்றும்  வணிக தொடர்பை வளர்க்கும் MELACH -Club  என்ற மூன்று குழுக்களை நிறுவி அதன் தொடர்புடைய விவரங்களை மாணவ மாணவரிடம் எடுத்துரைத்தார்.

கல்லூரியின் பதிவாளர் முனைவர் பி முருகானந்தம், துணை முதல்வர் முனைவர் ஜி.ஹரிதாஸ் வாழ்த்துரை வழங்கினர்.இக்குழுவில் தேர்ந்தெடுத்த மாணவ மாணவியர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவி கீர்த்தனா வரவேற்புரை வழங்கினார் மாணவி ஹரிணி நன்றி உரை வழங்கினார் இத்துறை பேராசிரியர்கள் பிரிசில்லா,ஜூடித் ஆகியோர் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a


#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO