அடுத்தடுத்து இயந்திரபழுது நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

அடுத்தடுத்து இயந்திரபழுது நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட கிராப்பட்டி உள்ள தனியார் பள்ளியில் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தனது வாக்கினை செலுத்திய நிலையில், அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திர பழுது காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்கு சாவடி எண் 212-ல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது வாக்கினை செலுத்திய நிலையில், அருகில் உள்ள 214 மற்றும் 215 ஆவது வாக்கு சாவடியில் இயந்திர பழுது காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துள்ளனர்.

குறிப்பாக 215 வது வாக்கு சாவடியில் பழுது சரி செய்யப்பட்ட நிலையில், 214 வது வாக்கு சாவடியில் விவி பேட் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது வரை பழுது நீக்கி வருவதால் வயதானவர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை, எவ்வளவு நேரம் ஆகும் எனக் கூறுங்கள் என தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 191-ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஏனென்றால் 10 வாக்குகள் பதிவான நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் பழுது ஏற்பட்டுள்ளதால் அதனை சரி செய்வதற்காக அதிகாரிகள் வந்துள்ளனர். நீண்ட நேரம் ஆவதால் வாக்காளர்கள் வெகுநேரமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision