பண மோசடி, கணினிசார் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது 219 வழக்குகள் பதிவு - 64 குற்றவாளிகள் கைது - 5 கோடி பணம் மீட்பு.

பண மோசடி, கணினிசார் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது 219 வழக்குகள் பதிவு - 64 குற்றவாளிகள் கைது - 5 கோடி பணம் மீட்பு.

திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் மத்திய மண்டலத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பொருட்டு, குற்றத்ததை தடுக்கும் விதமாக சட்ட விரோதமாக ஆன்லைன் பண மோசடி மற்றும் கணினிசார் குற்றச்செயல்களில் ஈடுபடும், சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு, திருச்சி மற்றும் தஞ்சாவூர் காவல் துறை துணை தலைவர்கள் மற்றும் மத்திய மண்டலத்துக்குட்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் மத்திய மண்டல மாவட்டங்களில் ஆன்லைன் பண மோசடி மற்றும் கணினிசார் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது (திருச்சி-51, புதுக்கோட்டை-25, கரூர்-22, பெரம்பலூர்-11, அரியலூர்-15, தஞ்சாவூர்-58, திருவாரூர்-20, நாகப்பட்டினம்-8 மற்றும் மயிலாடுதுறை-9). மேற்கண்ட வழக்குகளில் சம்மந்தப்பட்ட மொத்தம் 64 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு (திருச்சி-5, புதுக்கோட்டை-4, கரூர்-13, பெரம்பலூர்-3, அரியலூர்-6, தஞ்சாவூர்-24, திருவாரூர்-4, நாகப்பட்டினம்-2, மற்றும் மயிலாடுதுறை-3) சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட ஏமாற்று பேர்வழிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து 5,02,05,598/- பணம் கைப்பற்றப்பட்டு (திருச்சி-ரூ.1,83,20,671/-, புதுக்கோட்டை-ரூ.28,86,925/-, கரூர்-ரூ.1,25,09,081/-, பெரம்பலூர்-ரூ.26,62,195/-, அரியலூர்- .21,33,691/-, 5-.82,77,684/-, - 14,66,673/ -. 11,19,355/- மற்றும் மயிலாடுதுறை-ரூ.8,29,323/-) நீதிமன்ற உத்தரவின் படி பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையிலும் சமூக நல்லிணத்திற்கு எதிராக பதிவிட்ட (Facebook, Instagram, Whatsapp) குற்றவாளிகள் 40 (திருச்சி-9, பெரம்பலூர்-3, அரியலூர்- 5, தஞ்சாவூர்-8, திருவாரூர்-10, மயிலாடுதுறை-5) வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 (திருச்சி-6, அரியலூர்-2, தஞ்சாவூர்-1, திருவாரூர்-3, மயிலாடுதுறை-1) பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கணினிசார் குற்றங்கள், பண மோசடி, சமூக வலைதளங்களில் மோசடி செய்யும் நோக்கத்துடன் பதிவிடுதல் சம்மந்தமாக பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் 3211 (திருச்சி-89, புதுக்கோட்டை-193, கரூர்-163, பெரம்பலூர்-330, அரியலூர்-100, தஞ்சாவூர்-525, திருவாரூர்-1496, நாகப்பட்டினம்-195, மயிலாடுதுறை-120) விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு கணினிசார் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக இலவச எண்ணான 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு தெரிவிக்கிறார்.

கணினிசார் குற்றங்கள், சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையிலும் சமூக நல்லிணத்திற்கு எதிராக பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision