குளத்தில் மீன் பிடிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் அறிவழகன், அந்த பகுதியில் உள்ள தாவடி குளத்தில் மீன்பிடிக்க சென்ற பொழுது குளத்தில் இறங்கியுள்ளார். ஆழம் அதிகமாக இருந்ததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அறிவழகனை தண்ணீரில் இருந்து மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அறிவழகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision