பத்தாம் வகுப்பு கூட தாண்டாத அரசியல்வாதிகள் எப்படி இவ்வளவு சொத்து சேர்க்க முடிந்தது - திருச்சியில் கிருஷ்ணசாமி பேட்டி

பத்தாம் வகுப்பு கூட தாண்டாத அரசியல்வாதிகள் எப்படி இவ்வளவு சொத்து சேர்க்க முடிந்தது - திருச்சியில் கிருஷ்ணசாமி பேட்டி

புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்.... இரண்டு மாதத்துக்கு ஒரு முறை நாடாளுமன்ற தொகுதி வாரியாக சென்று கட்சியினருக்கு பயிற்சி அளிக்கப்படும், மனித உரிமை மண்ணுரிமை வாழ்வுரிமை மீட்புக்காக இயக்கமாக புதிய தமிழகம் செயல்பட்டு வருகிறது. நல்லிணக்கத்தை சீரழிக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக புதுக்கோட்டை வேங்கை வயல், நாங்குநேரியில் பள்ளி மாணவன் வீடு புகுந்து தாக்கப்பட்டார், இது போன்ற நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு முரண்பாட்டான சூழல்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னெடுத்து நடத்தும் நபர்களை மத்திய மாநில அரசுகள் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதனை கண்டித்து 28ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெறும். வன்கொடுமை தடுப்பு மற்றும் மனித உரிமை மீட்பு என்ற தலைப்பில் இந்த பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு கூட தாண்டாத ஆளும் கட்சியினர், அரசியல்வாதிகளால் மட்டும் அமைச்சர்களால் மட்டும் எம்எல்ஏவால் மருத்துவக் கல்லூரி என்ஜினியரிங் கல்லூரி வேளாண் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகள் தொடங்க முடிகிறது.தவறாக பெறப்பட்ட கையூட்டினால் தான் இதுபோன்று பல தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளது, ஜெகத்ரட்சகன் வீட்டில் இது மூன்றாவது முறை ரெய்டு.இதுபோன்று எவ.வேலு குறிப்பிட்ட திமுகவினர் வீட்டில் மட்டும் நடக்கிறது என்றால், இதில் எந்த ஒரு அரசியல் உள்நோக்கம் இல்லை.

உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்பதற்கு முன்னதாக கொசுவை ஒழிக்கட்டும், கையெழுத்து வாங்கி ஒன்றும் பண்ண முடியாது அதற்கு பதிலாக ஊர், ஊராக சென்று இதனையாவது ஒழிக்க நடவடிக்கை எடுக்கட்டும்.தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளும் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது, எந்த சிலையாக இருந்தாலும் அகற்றப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் பெரியார் சிலை மற்றும் அகற்ற வேண்டும் என்பது பிரச்சனையை ஏற்படுத்தும். Facebook whatsapp மட்டுமே இன்றைய தலைமுறையினை வழி நடத்துகிறது, தமிழகத்தில் உள்ள தலைவர்கள் சிலைகள் இளைஞர்களை வழிநடத்தவில்லை.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision