குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது - திருச்சியில் நகர் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ளது போல் நவீன முறையில் சாலைகளை தூய்மைப்படுத்தும் அதிநவீன வாகனங்கள் ( 1.73 லட்சம் செலவில் 2 வாகனம்), மேலும் வீடுக்களில் நேரடியாக குப்பைகைகளை பெற புதிய பேட்டரி வாகனம் முதல் கட்டமாக 30 வாகனங்களை இன்று தமிழக நகர் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் கேஎன் நேரு... மற்ற நகரங்களில் உள்ளது போல் அதிநவீன வாகனங்களை திருச்சிக்கு கொண்டு வந்துள்ளோம். குறிப்பாக சாலையின் ஓரங்களில் உள்ள மணல்களை இந்த வாகனம் துள்ளியமாக சுத்தம் செய்யும். ஒரு மணி நேரத்திற்கு 16 ஆயிரம் சதுர மீட்டர் அளவிற்கு இந்த வாகனம் சுத்தம் செய்யும்.
தமிழகம் முழுவதும் சில பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் முறைகேடு நடைபெற்றதாக அதிமுக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்... அவர்கள் முறையாக சரியாக நடத்தினார்களா ? இதை விட நேர்மையாக தேர்தலை நடத்த முடியாது.
ஜல்ஜிவன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு மாநிலத்திற்கு 75% நிதியை வழங்கினால் மட்டுமே எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியும் - 50% நிதியை மாநில அரசு கண்டிப்பாக கொடுக்க முடியாது. விவசாயக் கடனை முதல்வர் தள்ளுபடி செய்துள்ளார். அடுத்ததாக ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பாக ஏற்பாடுகள் செய்து வருகிறோம். தமிழகத்தில் நகர்புறத்தை நோக்கி மக்கள் வருகின்றனர்.
ஜல்ஜீவன் திட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போல் நகர்ப்புற மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தடுப்பணைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் நான் முன் வைத்துள்ளேன். திருச்சியில் கம்மரசம்பேட்டை, நொச்சியம் போன்ற பகுதிகளில் தடுப்பணைகளை கட்டுவதற்கு ஆய்வு மேற்கொண்டு உள்ளோம்.
ரேஷன் அட்டைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்கிற திட்டம் எப்போது நிறைவேறும் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை கண்டிப்பாக நிச்சயமாக தமிழக முதல்வர் நிறைவேற்றுவார் என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn