குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.30,000 ஆயிரம் மதிப்புள்ள டிவி பரிசாக வழங்கப்பட்டது
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பு முகாம்கள் மூலம் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க, கடந்த 03.10.2021 அன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 193 இடங்களிலும் , இரண்டு நடமாடும் தடுப்பூசி மருத்துவக் குழுவின் மூலமும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. மேற்படி நடமாடும் தடுப்பூசி மருத்துவக் குழுவின் மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் மாரிசங்கர் என்பவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ .30,000 / மதிப்புள்ள LG LED TV பரிசாக வழங்கப்பட்டது .
இதுதவிர அனைத்து கோட்டங்களிலிருந்தும் பல்வேறு நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ 1,50,000/ - மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் 10.10.2021 அன்று நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
எனவே தற்போது வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி தங்களை பாதுகாத்து கொள்ளவும். பரிசுப் பொருட்களை பெற்று பயன் அடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn