குறுஞ்செய்தியை நம்பி பணத்தை இழந்தவருக்கு பணத்தை மீட்டு தந்த சைபர் கிரைம் போலீசார்
திருச்சி மாநகரம், மூவேந்தர் நகரைச் சேர்ந்த வெள்ளைத்துரை என்பவரின் செல்போன் எண்ணுக்கு அவரது வங்கி விபரங்கள் (KYC) Update செய்யுமாறு குறுஞ்செய்தி வந்தவுடன் உடனே அதை உண்மை என நம்பி அந்த லிங்க் வழியே சென்று தனது வங்கி விபரங்களை பதிவு செய்ததாகவும், அதன்பின்னர் தனது வங்கி கணக்கிலிருந்து அனுமதியின்றி ரூ.99,900/- பணம் எடுக்கப்பட்டதாக ஆன்லைனில் NCRP மூலமாக கொடுத்த புகார் மனு திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல்நிலையத்தில் பெறப்பட்டதன் பேரில், காவல் ஆணையர் திருச்சி மாநகரம் அவர்களின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர் அவர்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முறைகேடாக நடைப்பெற்ற பண பரிவர்த்தனைகளை ஆராய்ந்ததில் மேற்படி பணம் ரூ. 99,900 Flip cart வழியாக பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.
மேற்படி ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் புகார்தாரருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்மந்தப்பட்ட வங்கியின் Legal Department-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததன் பேரில் மனுதாரர் இழந்த பணம் ரூ.99,900அவரது வங்கி கணக்குகளில் திரும்ப சேர்க்கப்பட்டது.
மேலும் இது போன்று செல்போன்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளையோ நம்பி தங்களுடைய வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் OTP-க்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் ஆன்லைன் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அவ்வாறு யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண்: 1930 -தொலைபேசி எண்ணை விரைவாக தொடர்பு கொள்ளுமாறு அல்லது www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனவும், திருச்சி மாநகரில் இதுபோன்ற ஆன்லைன் மூலம் பணமோசடி ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..