ஒரு நாள் நான் கதவ திறக்கிறேன் என அடம் பிடித்த திருவானைக்கோவில் யானை அகிலா

ஒரு நாள் நான் கதவ திறக்கிறேன் என அடம் பிடித்த திருவானைக்கோவில் யானை அகிலா

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கி வரும் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரர் திருக்கோயிலில் அகிலா என்ற கோயில் யானை  உள்ளது. இந்த யானைக்கு கோயிலில் தனி நீச்சல் குளம், நடைப்பயிற்சி  செய்வதற்கு நடைபாதை உள்ளிட்ட அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில்  தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயில் யானை அகிலா அங்கு வரும்  பக்தர்களிடம் தலையை ஆட்டிக் கொண்டு தும்பிக்கையால் ஆசீர்வாதம் செய்யும் அழகை தங்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்து  தங்களது முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பக்தர்கள் பதிவேற்றம் செய்வார்கள். 

திருவானைக்காவல் கோயிலில் மதியம் உச்சிகால பூஜையின் போது பெரிய கதவு அடைப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று (15.02.2023) கோவில் ராட்சத கதவை யானை அகிலா தனது தும்பிக்கையால் திறந்து கம்பீரமாக வெளியே வந்தது. இதனை வீடியோவாக எடுத்த கோவில் நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்‌.

தற்போது அந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக  பரவி அனைவரையும் யானை அகிலா கவர்ந்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn