மணப்பாறை அருகே காட்டெருமை உயிரிழப்பு

மணப்பாறை அருகே காட்டெருமை உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே தச்சமலை காப்புகாடு பகுதியில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை ஒன்று வயதி முதிர்வு காரணமாக உயிரிழந்து கிடந்துள்ளது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வனவர் பெரியசாமி தலைமையிலான துவரங்குறிச்சி வனத்துறையினர் காட்டெருமை உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூராய்விற்கு பின் வனப்பகுதியிலேயே புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn