திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 120 டன் நெகிழி கழிவுகள் சேகரிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட வயலூர் சாலை பகுதி மற்றும் தென்னூர் உழவர் சந்தை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பேரி பேக் போன்ற பொருட்களின் பயன்பாட்டிற்கு எதிராக மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனாலும் பாலிதீன் பைகள் ஒழிந்த பாடில்லை. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் இன்று (15.02.2023) மாவட்டம் முழுவதும், திருச்சி மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் நெகிழிக் கழிவுகளை சேகரிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் வயலூர் ரோடு கத்திரி வாய்க்கால் மற்றும் தென்னூர்உழவர் சந்தை பகுதிகளில் நெகிழிக் கழிவுகள் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், தென்னூர் உழவர் சந்தையில் பொது மக்கள் மற்றும் கடை உரிமையாளர் களுக்கு மஞ்சள்பை பயன்படுத்த ஊக்குவித்து மஞ்சள் பைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn