திருச்சியில் போலி மதுபானம் தயாரிப்பு - காவல் ஆய்வாளர், காவலர் பணியிடை நீக்கம்

திருச்சியில் போலி மதுபானம் தயாரிப்பு - காவல் ஆய்வாளர், காவலர் பணியிடை நீக்கம்

திருச்சி மணிகண்டம் அருகே நாகமங்கலம் செட்டியாபட்டியில் சிலர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு போலி மதுபான தயாரிப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்திய புலனாய்வு பிரிவினரும், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று வீட்டுக்குள்ள அதிரடியாக சோதனை நடத்தினர்.

அங்கு சுமார் 450 லிட்டர் மதுபானங்களும் 10,000 காலி மதுபான பாட்டில்கள், 20 கேன்களில் எரிசாராயம், 50 ஆயிரம் பாட்டில் மூடிகள், போலி லேபிள்கள், எந்திரம் உள்ளிட்ட மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய பொருட்களும், ஒரு கார், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 6 பேரை பிடித்த மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் மாவட்ட தனிப்படையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில் திருச்சி புறநகரில் போலி மதுபானம் தயாரித்தது பற்றி தகவல் சேகரிக்காமல், பணியில் அலட்சியமாக இருந்தமைக்காக திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் மீராபாய், மணிகண்டம் காவல்நிலைய தனிப்பிரிவு காவலர் சுரேஷ் ஆகியோரை திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் பணி இடைநீக்கம் செய்தார். மேலும் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட இருவருக்கும் இதில் முற்றிலும் தொடர்பு இல்லையென்றாலும் தங்களது பணியை சரிவர செய்யாத காரணத்தால் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO