திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 18 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட வாலிபர்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சட்ட விரோதமாக கடத்தல் பொருட்கள் மற்றும் சமூக விரோத செயல்பாடுகளை தடுப்பதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரயில்வே ஜங்ஷனில் உள்ள 2-வது நடை மேடை சுரங்க பாதையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒடிசாவை சேர்ந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்த போது 4 கிலோ கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.80,000 என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டது. அதன் பின்னர் மேலும் ரயில் நிலையத்தில் நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது அதில்14 கிலோ ( 4 மூட்டைகள்) எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை கடத்தி வந்த நபர் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. பின்னர் 4 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் நாயக் (26) என்பவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
இந்த கஞ்சா பொட்டலங்கள் ஹவுரா எக்ஸ்பிரஸ் மூலம் ஒடிசாவிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்டதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision