பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சமத்துவபுரம் மகாகவி பாரதியார் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள்

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சமத்துவபுரம் மகாகவி பாரதியார் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள்

திருச்சி மாவட்டம், நவல்பபட்டு ஊராட்சி சமத்துவபுரம் மகாகவி பாரதியார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ஊர் பகுதிகளில் உள்ள ப்ளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து ப்ளாஸ்டிக் பொருட்களின் தீங்கு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் சமத்துவபுர பகுதியில் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அக்னி சிறகுகள் அமைப்பின் இயக்குனர் மகேந்திரன்  கூறியதாவது... 100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். இப்பகுதி இளைஞர்கள் இணைந்து இப்பகுதியில் உள்ள மக்களுக்கு அனைத்து விதமான சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும் என்று மகாகவி பாரதியார் இளைஞர் நற்பணி மன்றத்தை உருவாக்கியுள்ளனர்.

சமூக அக்கறையோடு ஒவ்வொரு செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தினை பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தன்னுடைய பகுதியினை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும் என்று இன்றைக்கு தூய்மை பணியில் ஈடுபட்டதோடு வீடு வீடாக சென்று குடியிருப்பாளர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்   வரும் நாட்களில் ஒவ்வொரு வீடுகளுக்கும்  மக்கும் குப்பை மக்காத குப்பை என்று குப்பைகளை பிரித்து வைப்பதற்கான  தொட்டிகளை தயார் செய்து ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்க இருக்கின்றனர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இந்த மாதம் முழுவதும்  மக்கும் குப்பை மக்காத குப்பைகளை வீடுகளில் பொதுமக்களை சேகரிக்கச் செய்து பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான ஒரு முதல் படியை தொடங்கி உள்ளோம்
என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn