வாட்டி வதைக்கும் கோடை வெயில் - திருச்சியில் தொடர் மின்வெட்டு - பொதுமக்கள் கடும் அவதி

வாட்டி வதைக்கும் கோடை வெயில் - திருச்சியில் தொடர் மின்வெட்டு - பொதுமக்கள் கடும் அவதி

தமிழ்நாட்டில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் திருச்சியில் மின்வெட்டு பிரச்சினை மீண்டும் துவங்கியுள்ளது.

குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் நிலைமை சீராகி மீண்டும் மின் வினியோகம் வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை முடிந்த பிறகு இரவு நேரங்களில் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை மாநகரில் பல பகுதிகளை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக திருவரம்பூர், பொன்மலை, கே.கே.நகர், எடமலைப்பட்டி புதூர், பெரியமிளகுபாறை, கரு மண்டபம், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இரவு நேரங்களில் மின்வெட்டு செய்யப்படுகிறது.

ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்தால், மும்முனை மின்சாரத்தில் ஒரு முனையில் மின்சாரம் வருவதில்லை. சில பகுதிகளை குறைந்து அழுத்த மின்சாரத்தால் மின்விசிறிகள், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவைகள் இயங்கவில்லை. அதனால் மாநகரில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு வகையில் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக புகார் அளிக்க பொதுமக்கள் மற்றும் அந்தந்த பகுதி மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் தொடர்பு எண்களை தொடர்பு கொண்டாலும் இணைப்பு கிடைப்பதில்லை என்றும், சில இடங்களில் இணைப்பு கிடைக்காததாலும் புகார்களை பதிவு செய்கிறார்களே தவிர விடியும் வரை மின்சாரம் வருவதில் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது எதிர்பார்ப்பாய் விட பல மடங்கு மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஏசி இயந்திரங்கள் பயன்பாடு சுமார் 40% அதிகரித்துள்ளது. இதனால் மின் தேவை அதிகரித்து ஆங்காங்கே மின்மாற்றுகளில் பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைபடுகிறது. தேவையற்ற வகையில் மின்சாரத்தை பயன்படுத்துவதை பொதுமக்கள் கட்டுக்குள் வைத்தால் ஓரளவுக்கு பிரச்சனையை சமாளிக்க முடியும் என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision