திருச்சியை சேர்ந்த 3 வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் - நிதியுதவி கோரும் வீரர்கள்

திருச்சியை சேர்ந்த 3 வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் - நிதியுதவி கோரும் வீரர்கள்

பூட்டான் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தபோது பொருளாதார பிரச்சினை காரணமாக திருச்சியை சேர்ந்த 3 வீரர்கள் அதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிதி உதவி செய்ய வேண்டும் என்றுமாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்  கூறியிருக்கிறார்.

அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை பூடான் நாட்டில் நடைபெற இருக்கும் தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிலிருந்து பல   பிரிவுகளின்கீழ் இளைஞர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

 விளையாட்டுப் போட்டியில் திருச்சியை சேர்ந்த இரு இளைஞர்களும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீரரும் என மூவர் சர்வதேச போட்டியில்  பங்கேற்க இருக்கின்றனர் ஆனால் இவர்கள் தற்போது பூடான் செல்வதற்கான நிதி உதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து போட்டியில் பங்கேற்க இருக்கும்  அருணிடம் பேசிய போது அவர் கூறுகையில்,  
நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு முதல் இடம் பெற்றறேன்.தற்போது சர்வதேச அளவில் நடைபெற இருக்கும்   இப்போட்டியில் பங்கேற்க  தேர்வாகி உள்ளேன்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை A.தோப்புப்பட்டியில் வசிக்கிறேன். ஸ்ரீ விடியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டுB.com  படித்து வருகிறேன்,
 என் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் திறமை உள்ளவர்களுக்கு எப்போதுமே சவாலாக இருப்பது பொருளாதாரம் தான்.

 எனக்கும் அப்படிதான் தற்போது சர்வதேச அளவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த போதும் என்னுடைய பொருளாதாரம் என்னை அங்கு செல்வதற்கான இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியுள்ளது.விளையாட்டு துறையில் குறிப்பாக  நமது அடையாளமான கபடி போட்டியில் உலக அளவில் பெயர் பதிக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு விளையாடிக் கொண்டிருக்கின்றேன்.

பூடானில் நடைபெற இருக்கும் இந்த சர்வதேச போட்டியில் கண்டிப்பாக கலந்து கொண்டு முதலிடம் பிடிப்பேன் என்பதில் நம்பிக்கை உள்ளது ஆனால் போட்டிக்கு கலந்து கொள்வதற்கான நிதி உதவியை வழங்க வேண்டும்  என்றுதான் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.பூடான் நாட்டிற்கு செல்ல  ஒவ்வொருவருக்கும் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.திருச்சியில் இருந்து கபடி போட்டியில் நானும் விஜயகுமாரும் கலந்துகொள்ள இருக்கின்றோம் அதேபோன்று சரவணகுமார் என்பவர் தடகளப் போட்டியில்  1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கின்றார்.எங்கள் மூவருக்குமே இப்போது பூடான்  செல்வதற்கான பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நேற்றைய தினனமே  நாங்கள் பணம்  செலுத்த வேண்டியதற்கான கால அவகாகசம்  முடிவடைந்த நிலையில் இரண்டு நாட்கள்  கால அவகாசம் கேட்டு இருந்ததோடு உதவி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.தற்போது  மாவட்ட ஆட்சியர் இன்றைய தினம்   நேரில் சந்தித்துக்கும்படி கூறியுள்ளார்.திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருக்கின்றது அப்படியே வாய்ப்பு இருந்தாலும் எங்களை போன்ற  பின்தங்கிய பொருளாதார பின்னணியிலிருந்து வரும் வீரர்கள் எப்பொழுதுமே சவாலான சூழலை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது எனவே விளையாட்டு வீரர்களுக்கு இது போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்காக வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவர்களுக்கான நிதி உதவி அரசு  வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM