குழந்தைகளுக்கான இணைய வழி கற்பனை கதை சொல்லல் பயிற்சி பட்டறை 

குழந்தைகளுக்கான இணைய வழி கற்பனை கதை சொல்லல் பயிற்சி பட்டறை 

கற்பனை அறிவை விட மிகவும் முக்கியமானது என்பது  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்று, இன்றைக்கு கற்பனை என்பது மிகவும் குறைந்து வருகிறது. கற்பனை கதைகள் கூறுவதில் கைதேர்ந்தவர்கள் நம் தாத்தா பாட்டிகள், பாட்டி தாத்தா என்பதை விட அவர்களை கதைசொல்லி என்பதே மிகவும் பொருத்தமான ஒன்று. கதை கேட்கும் குழந்தைகளும் அதிக கற்பனைத் திறனை வளர்த்துக் கொண்டு பல கற்பனைக் கதாபாத்திரங்களையும் உருவாக்குவார்கள். ஆனால் இன்றைய கால சூழலில் குழந்தைகளுக்கு அவர்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வது ஒரு சவாலான சூழல் ஆக இருக்கின்றது. குழந்தைகளிடையே கற்பனை திறனை மேம்படுத்துவதற்கான ஒரு சிறு முயற்சியாய் இணைய  வழியில் கற்பனை கதையை சொல்லும் பயிற்சி பட்டறை நடத்தி வருகிறார் சந்தோஷ் மாதேவன்.

இதுபற்றி சந்தோஷ் கூறுகையில்... கதை சொல்லல் என்பது தனிக்கலை என்றே கூறலாம். கதை சொல்லல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று கதைகளும் கதை சொல்லும் திறனும் என்னை ஒரு திரைக்கதை எழுத்தாளன் ஆகவே மாற்றி இருக்கின்றது. கதைகளுக்கு எப்போதுமே ஒரு சிறப்புண்டு அவை நம் வாழ்வியலோடு பிணைந்தது. "கதை நெருப்பை விட வேகமாக பரவக்கூடியது, நெருப்பை விட சுடக்கூடியது, நெருப்பாலும் அழிக்க முடியாதது கதைகள் தான்".

குழந்தைகள் உலகம் தனி உலகம் என்பார்கள் அவர்கள் பார்க்கும், சந்திக்கும் ஒவ்வொருவரும் அவர்கள்  உலகத்தில் ஓர் அங்கம்தான் அவர்கள் உருவகப்படுத்தும் எல்லாமே அந்த உலகத்தில் வாழும் ஜீவராசிகள் ஆக மாறும். அதிலும் கற்பனை கதைகளை உருவாக்கி குழந்தைகள் அவர்களுடைய மொழிகளில் கூறும் போது அதற்கே உரித்தான அலாதியான அழகு வந்துசேரும். ஆனால் இன்றைக்கு இருக்கும் குழந்தைகளுக்கு தங்களுடைய கற்பனை திறனை வெளிக்காட்டுவதற்கு பல சவாலான சூழல் ஏற்படுகின்றது.

குறிப்பாக இந்தக் கொரானா காலத்தில் அவர்கள் யாரோடும் உரையாடாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் பொழுது அவர்களுடைய தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாக உள்ளது. குழந்தைகளுடைய திறமையையும் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் ஒரு வாய்ப்பாக கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள். ஆகவே இது இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். இன்றைய  சூழலுக்கு ஏற்றவாறு  இணையவழியில் குழந்தைகளுக்கான இந்த  "கற்பனை கதை சொல்லும் பயிற்சி பட்டறை" தொடர்கிறோம்.

இந்த பயிற்சி பட்டறையில் 5 முதல் 12 வயது குழந்தைகள் தமிழகத்திலிருந்து எங்கிருந்து வேண்டுமானாலும் பங்கு பெறலாம். தற்போது பள்ளிகளில் இணையவழி வகுப்புகளும் தொடங்க இருக்கின்ற நிலையில் அவர்களுடைய தனித்திறமையை வளர்ப்பதற்காக வாராந்திர பயிற்சியாக இதை மாற்றலாம் என்று முடிவு செய்துள்ளோம். வாரத்தில் இரண்டு நாட்கள் அவர்கள் நாங்கள் கொடுக்கும் கரு பொருளையோ அல்லது அவர்கள் பார்க்கும் விலங்குகளை அல்லது கதாபாத்திரங்களை வைத்து ஒரு கற்பனைக் கதைகளை உருவாக்க வேண்டும்.


என்னோடு  என் நண்பர்களும் இணைந்து செயல்படுகிறார்கள் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள்  கதைசொல்லும் பயிற்சிப் பட்டறையில் உள்ளனர். பல பெற்றோர்கள் குழந்தைகளை இந்த பயிற்சிக்கு அனுப்பும் போது அவர்கள் எங்களிடம் கூறுவது என் குழந்தையை படைப்பாற்றல் மிக்கவனாகவும் திறமை மிக்கவனாக மாற்றுங்கள் என்பதே ஆனால் இந்த வார்த்தைகளை எங்களுக்கு வியப்பாக இருக்கும் படைப்பாற்றல் தனி திறமையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் நாங்கள் அதை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு தான் உருவாக்குகிறோமே தவிர அவர்களிடம் படைப்பாற்றலை உருவாக்கவில்லை என்பதே நாங்கள் கூறும் மறு மொழியாக இருக்கும் என்கிறார்.

அதுமட்டுமின்றி நாங்கள் இதற்கு பயிற்சி பட்டறை என்று தான் கூறுவோம் பயிற்சி வகுப்புகள் என்று கூட கூறுவதில்லை வகுப்புகள் மாணவனுக்கு மன அழுத்தத்தை தரும் ஆனால் பயிற்சி பட்டறைகள் அவன் தனித்துவத்தை மேம்படுத்தும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த பயிற்சியால் அவர்கள் வருங்காலத்தில் கதை சொல்லிகளாக மட்டுமில்லாமல் அவர்களுடைய கற்பனை திறனை வளர்த்துக் கொண்டு புதுமையான பலவற்றை  உருவாக்குவதிலும் அவர்கள் வல்லமை மிம்கவர்களாக மாறுவதற்கு அவர்களுடைய கற்பனைத்திறனை அதிகப்படுத்துததலே சிறந்தது  என்ற ஒரே நோக்கோடு இதனை செய்து வருகின்றோம் என்கிறார் சந்தோஷ்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve