திருச்சி விவசாயிகள் பேரணியில் தள்ளுமுள்ளு வாகனங்கள் சேதம் - 5 பேருக்கு காயம் - போலீசாருடன் ரகளை

திருச்சி விவசாயிகள் பேரணியில் தள்ளுமுள்ளு வாகனங்கள் சேதம் - 5 பேருக்கு காயம் - போலீசாருடன் ரகளை

Advertisement

குடியரசு தின விழா தினத்தில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு ஆதரவாக திருச்சி எம்ஜிஆர் சிலை முன்னதாக ஏஐடியுசி( aituc intuc citu) சிஐடியு மற்றும் விவசாய அமைப்புகள் இருசக்கர வாகனத்தில் தேசியக் கொடியை ஏந்தி திருச்சி மத்திய பேருந்து நிலையம் வரை பேரணி நடத்த இருந்தனர். காவல்துறையினர் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

விவசாயம் தொழிற்சங்க அமைப்பை சேர்ந்தவர்கள் பேரணியை துவக்க முயற்சி செய்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் . விவசாய அமைப்புகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ரகளை நடந்தது.

Advertisement

சுமார் 15 நிமிடம் எம்ஜிஆர் சிலை நீதிமன்றம் சாலை போர்க்களம் போல காட்சியளித்தது. பின்னர் காவல்துறை துணை ஆணையர் பவன் குமார் தொடர்ந்து அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு முடிவில் பேரணிக்கு அனுமதி தந்தார். இடைவெளி விட்டு வாகன பேரணி விட காவல்துறை அனுமதித்தனர்.

இப்போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஐந்து இரு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்தது. 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து நீதிமன்றம் அருகே தொடங்கிய இந்த பேரணி ஜங்சன் ரயில் நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.