டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் தேசியக் கொடியை ஏந்தி எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் தேசியக் கொடியை ஏந்தி எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்!!

திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் எஸ்டிபிஐ கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

நாடு முழுவதும் 72வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் டிராக்டர் பேரணிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டம் என பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எஸ்டிபிஐ கட்சியினை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைகளில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

திருச்சி பாலக்கரையில் இருந்து காந்தி மார்க்கெட் வரை பேரணி செல்லவிருந்த எஸ்டிபிஐ கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்பு பாலக்கரை பகுதியில் தங்களுடைய கண்டன ஆர்ப்பாட்டங்களை தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.