திருச்சியில் 1742 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல் -வீட்டிற்க்கு சீல்

திருச்சியில் 1742 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல் -வீட்டிற்க்கு சீல்

திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் Dr. ரமேஷ்பாபு அவர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சிராப்பள்ளி அரியமங்கலம் திருமகள் தெருவில் செல்வின் என்பவருடைய வீட்டை ஆய்வு செய்யும்போது சுமார் 1000 கிலோ கலப்பட தேயிலை தூள் கண்டறியப்பட்டு வழக்கு தொடுப்பதற்காக மூன்று சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டும், அதனை பறிமுதல் செய்து பிணை பத்திரம் போடப்பட்டு அவரது வீட்டில் ஒரு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

  மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாத்யைங்கார்பேட்டையில் 5 தேயிலை தூள் விற்பனையாளர்கள் கடை மற்றும் வீட்டை ஆய்வு செய்தபோது சுமார் 742 கிலோ கலப்பட தேயிலை தூள் கண்டறியப்பட்டு வழக்கு போடுவதற்கு மூன்று உணவு மாதிரி எடுக்கப்பட்டு அவர்களது வீட்டில் பிணைப்பத்திரம் போடப்பட்டு சீல் செய்யபட்டுள்ளது.         

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆக மொத்தம்  1742 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 6 சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் பொதுமக்களும் உணவு வணிகர்களும் இது போன்று கலப்பட தேயிலை தூளை விற்பனை செய்யக்கூடாது என்றும், பொதுமக்களும் தங்களது பகுதியில்  இதுபோன்ற கலப்படம் கண்டறிந்தால் கீழே கொடுக்கப்பட்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார். 
இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வசந்தன் ஜஸ்டின் ஸ்டாலின் பாண்டி இப்ராஹிம் ரெங்கநாதன் வடிவேலு் ஆகியோர் உடன் இருந்தனர்.

உணவு பாதுகாப்பு துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
தொலைபேசி எண்
99 44 95 95 95
95 85 95 95 95
மாநில புகார் எண் 
94 44 04 23 22

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj#

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO