தமிழ்நாட்டில் பிரதமர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு கோபமான அமைச்சர் நேரு

தமிழ்நாட்டில் பிரதமர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு கோபமான அமைச்சர் நேரு

தமிழ்நாடு நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்..... திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே 4 கோடியே 30 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சர்.ஏ.டி பன்னீர்செல்வம் எம்.கே தியாகராஜ பாகவதர் மணிமண்டபங்களை திறந்து வைக்க நேரில் எங்களை செல்ல முதல்வர் ஆணையிட்டார். இந்த நிகழ்வு அனைவருக்குமான அரசு என்பதை தமிழ்நாடு முதல்வர் நிரூபித்துள்ளார்.

திருச்சி காவிரி பாலம் விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும்.திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பணி முழுவதும் முடிந்தவுடன் திறக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்க்கு விமர்சனம் அதிகமாக எழுந்தது. முதல்வர் எல்லா பணிகளும் முடிந்தவுடன் திறக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா தான் நன்றாக ஆட்சி புரிந்தார் என பிரதமர் பேசியுள்ளது குறித்து கேட்டதற்கு பிரதமரை போய் கேளுங்க என கோபமாக செய்தியாளர்களிடம் பதில் அளித்து சென்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision