சமயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்- காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்

சமயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்- காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்

 திருச்சி மாவட்டம், சமயபுரம் பேரூராட்சி பகுதியில் பிரதி வாரம் சனிக்கிழமை நடைபெறும் ஆடுகள் வாரச் சந்தை வரும் பொங்கல்  பண்டிகையினை முன்னிட்டு  நடைபெற்றதால் ஆடுகள் வரத்து குறைவாக வந்ததாலும் ,விற்பனை மந்தமாக நடைபெற்றது.
          சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில்  திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பிரதி வாரம் சனிக்கிழமை ஆடு வாரச் சந்தை நீண்ட காலமாக  நடைபெற்று வருகிறது.

 இந்த வாரச் சந்தைக்கு லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர்,  முசிறி, துறையூர் உள்ளிட்ட  பகுதியிலிருந்து  ஆடுகளை வளர்ப்போர் மற்றும் ஆடுகளை வாங்குவோர் மட்டுமல்லாது  திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர்,  திண்டுக்கல், மதுரை,  ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்த வியபாரிகளும் இந்த வாரச்சந்தைக்கு வந்து ஆடுகளை கொள்முதல் செய்வது வழக்கம்.


 இதற்காக ஆடுகளை கொள்முதல் செய்யும் ஆட்டிறைச்சி வியபாரிகள் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில்  குறைந்தளவு ஆடுகளை கொள்முதல் செய்தனர். காரணம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்று கிழமைகளில் முழுஊரடங்கு பிறப்பித்துள்ளதாலும், அதே போல பொங்கல் பண்டிகை கரிநாள் ஞாயிற்று கிழமை வருவதால் ஆடுகளை கொள்முதல் செய்ய வியபாரிகள் குறைந்தளவே வந்தனர்.

இந்த வாரச் சந்தையில் பண்டிகை காலங்களில் சுமார் ரூ. 75  லட்சம் முதல் ரூ. ஒரு கோடிக்கு மேல்  ஆடுகள் விற்பனை செய்த நிலையில்  பொங்கல் பண்டிகையினை
 முன்னிட்டு நடைபெற்ற வாரச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைவாக இருந்ததால்,  விற்பனையும் மந்தமாக நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

  பொங்கல் பண்டிகை கரிநாள் ஞாயிற்று கிழமை வருகிறதெனவும், அன்றைய தினம் தமிழக அரசு கொரோனா பரவல் தொடர்பாக முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளதால. இறைகடைகள் செயல்பட முடியாத நிலை உள்ளதென்றனர் ஆட்டிறைச்சி வியபாரிகள்.
சந்தைக்கு வந்திருந்த  அனைவரும் பெரும்பாலனோர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தனர். 
    அதே வேலையில் சந்தைக்கு வந்திருந்த ஆடுகளில் கோமாரி நோய் பாதிப்பிற்குள்ளான ஆடுகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn