கல்லூரிகளில் இனி விருப்பப்பாடமாக தேசிய மாணவர் படை அமைப்பு ( என்சிசி )

கல்லூரிகளில் இனி விருப்பப்பாடமாக தேசிய மாணவர் படை அமைப்பு ( என்சிசி )

தற்பொழுது இருக்கக்கூடிய கல்லூரிகளில் தேசிய மாணவர் படை அமைப்பு ( என்சிசி ) இதுவரை இணை செயல்பாடுகளாக மட்டுமே இருந்து வந்த நிலை மாறி, நடப்பாண்டு முதல், மாணவர்களது பாடத்திட்டத்திலேயே ஒரு விருப்பப் பாடமாக என்சிசி-யைச் சேர்த்துக் கொள்ள யூஜிசி மூலம் மத்திய அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளது. இவ்வாணையை நடைமுறைப்படுத்தும் விதமாக, திருச்சி ராக்ஃபோர்ட் குரூப் தலைமை அதிகாரி குரூப்கமாண்டர் இளவரசன் தலைமையில் திருச்சி குரூப்பின் எல்லைக்குட்பட்ட 13 மாவட்டங்களில் என்சிசி அமைப்பு செயல்பாட்டிலுள்ள 75 கல்லூரிகளிலும் இதனை விருப்பப்பாடமாக கொண்டு வர உரிய பணிகளைச் செய்ய திட்டமிடப்பட்டது.


இதன் ஒரு பகுதியாக சென்ற வாரம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர். என். ராஜேந்திரன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர். செல்வம் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கலந்தாய்வுக் கூட்டங்களில், திருச்சி ராக்ஃபோர்ட் என்சிசி குரூப்பின் தலைவர் குரூப் கமாண்டர் கர்னல் இளவரசன் தலைமையில் திருச்சி கூட்டுத்தொகுதி தலைமையகத்தின் கீழுள்ள இதர பட்டாலியன்களின் தலைமை அலுவலர்களான ராணுவ அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், திருச்சி என்சிசி குரூப்பின் ஆளுகைக்குட்பட்ட கல்லூரிகளில், என்சிசி-யை ஒரு விருப்ப பாடமாக ஏற்பது குறித்தும், அதனுடைய பாடத்திட்டம், பயிற்சி, வகுப்புகள் மற்றும் தேர்வு முறைகள்  குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில், தற்பொழுது என்சிசி அமைப்பு செயல்படும் கல்லூரிகளில், தேசிய மாணவர் படை பயிற்சியினை விருப்பப் பாடமாக கொண்டு வருதல், இதனை விருப்பப்பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்கள் சமூக நலனில் அக்கறை கொண்ட நற்குடிமகனாக உருவாகிடப் பெறும் பயிற்சியுடன் மத்திய, மாநில மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள், இந்திய ராணுவத்தில், வான்படை, கப்பற்படை, காவல்துறை போன்றவற்றில் தற்பொழுது  நடைமுறையிலுள்ள முன்னுரிமைகள், வசதி வாய்ப்புகள் மற்றும் சம்பளம் ஆகியவை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் போன்றவை விவாதிக்கப்பட்டன.


முடிவில் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இதனைக் குறித்துத் தெளிவாகத் தெரிவித்து தேசிய மாணவர் படையில் சேர்கின்ற மாணவ மாணவிகள் இதனைஒரு விருப்பப் பாடமாக ஏற்கும் விதத்தில் இப்பயிற்சினை பாடத்திட்டத்தில் இணைத்து நடைமுறைப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve