முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

இன்றைய கொரானா காலகட்டத்தில் நோய் பற்றிய பயம் ஒரு புறமிருக்க ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ செலவினை நினைத்தே பலரும் பயப்படுகின்றனர். ஏழை, எளிய மக்களின் தலையில் கோவிட் சிகிச்சை என்ற பெயரில் மிகப் பெரிய பொருளாதாரச் சுமை விழுந்து விடாமல் பார்த்துக்கொள்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம்." அவர்களுக்காக உருவாக்கப்பட்டதே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் .
இத்திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதியுடையவர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விபரங்களை பின்வருமாறு காண்போம்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை பெறுவதற்கான தகுதி தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் அவசியம். குடும்ப அட்டை இருப்பதன் இருப்பதன் மூலமும் ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பவர்களுக்கு இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இத்திட்டத்தின் நன்மைகளுக்கு தகுதி பெறுவதற்கு சம்பந்தப்பட்ட குடும்ப தலைவரின் சுயஅறிவிப்புடன் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அதிகாரிகளால் குடும்ப அட்டை மற்றும் வருமான மதிப்பீட்டை உருவாக்குவது போதுமானது.

குடும்ப அட்டை சமர்ப்பிப்பது போதுமானது திட்டத்தில் இணைத்து உள்ள உறுப்பினர்கள் பற்றி எவ்வித குறிக்கீட்டு விசாரணைகளும் நடத்தப்படுவதில்லை. இதைப்போன்று முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளும் எந்த வருமான வரம்பும் இல்லாமல் இதற்கு தகுதியுடையவர்களாக இந்த திட்டத்தை விண்ணப்பிக்கலாம். பிற மாநிலங்களில் இருந்து குடியேறியவர்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் துறையிலிருந்து தகுதியான உறுப்பினர்களின் பட்டியலுடன் முதலமைச்சர் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டத்தில் சேரலாம். 

பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத எந்த ஒரு அமைப்பிலும் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு ஒற்றை அட்டை வழங்கப்படலாம். மேற்பட்ட மீட்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அரசாங்கத்தால் ஆதரவற்றவர்கள் என வரையறுக்கப்பட்ட அனைவருக்கும் இந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இத்திட்டத்தை பயன்படுத்துவதற்காக நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அறையில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. 

விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட இரண்டு புகைப்படங்களோடு ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் மேற் கூறியவர்களில் அவர்களுக்கான பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் என்று ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து VAO விடம் ஒரு கையெழுத்து பெற்று மீண்டும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலம் அவர்களுக்கு  காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் இணைவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பெற இயலாது. நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு குடும்பத்தலைவர் அல்லது குடும்பத்திலிருந்து யாரேனும் ஒருவர் சென்று விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த மருத்துவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக அரசு ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் என்ற அளவு என்பது கோவிட் சிகிச்சையையும் உட்படுத்தியது தான்.

ஒருவேளை நோயாளிகளின் சிகிச்சைக்கு 5 லட்சத்தை விட அதிகமாக காப்பீட்டு நிறுவனத்தால் செலவிடபட்டால் ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமும் செலவிடப்பட்ட உரிமைக்கோரல் விகிதம் 95 விழுக்காட்டிற்கும் மேல் வரும் போது கூடுதல் தொகையை காப்பீட்டு நிறுவனத்திற்கு மீண்டும் வழங்கிட தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒரு வேளை கொரானா சிகிச்சைக்கு ஆகும் செலவினங்களை பற்றிய முடிவுகள் அந்தந்த தனிநபர்களின் சிகிச்சையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve