திருச்சி காந்தி மார்க்கெட் வருகிற 20-ஆம் தேதி இரவு முதல் திறக்க வியாபாரிகள் கோரிக்கை - திருச்சி மாவட்ட ஆட்சியர் பரிசீலனை

திருச்சி காந்தி மார்க்கெட் வருகிற 20-ஆம் தேதி இரவு முதல் திறக்க வியாபாரிகள் கோரிக்கை - திருச்சி மாவட்ட ஆட்சியர் பரிசீலனை

கொரோனா தொற்று 2வது அலை காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் திருச்சியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததால் கடுமையான கட்டுபாடுகளை விதித்தது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான காந்தி சந்தை, மீன் மார்க்கெட் போன்றவற்றை மூட உத்தரவிட்டது.

இதன் ஒருபகுதியாக கடந்த மே மாதம் 7ம் தேதி திருச்சி காந்தி சந்தை அனைத்து நுழைவு வாயில்கள் மூடப்பட்டன. பின்னர் மொத்தம் வியாபாரம் மேலபுலிவார்டு ரோடு, மரக்கடை பகுதியிலும், சில்லரை வியாபாரம் கீழப்புலிவார்டு பகுதியில் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று சிறிது குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் திருச்சியில் மாற்று இடத்தில் செயல்பட்டு வரும் சந்தையை மீண்டும் காந்தி சந்தையில் செயல்பட காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் (20.06.2021) அன்று இரவு 10 மணியிலிருந்து மறுநாள் காலை 5 மணி வரை மொத்த வியாபாரமும், 5 மணியிலிருந்து 2 மணி வரை சில்லறை வியாபாரமும் நடைபெறும். வியாபாரிகள் கோவிட் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி. முககவசம் இல்லாமல் வரும் பொதுமக்கள் யாருக்கும் காய்கறி விற்பனை நடைபெறாது என வியாபாரிகள் முடிவு. மதியம் 2 மணியிலிருந்து 5 மணி வரை காந்தி மார்க்கெட்டில் சுத்தம் செய்யும் பணி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வியாபாரிகளின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். மேலும் காந்தி மார்க்கெட்டில் பணிபுரியும் வணிகர்கள் 2800 பேரில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 70 - 80 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் வரும் திங்கட்கிழமை முதல் மொத்த விற்பனை திறக்கும் போது தடுப்பூசி போடாதவர்கள் விற்பனை செய்ய அனுமதிக்கமாட்டோம், கடையை திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடதக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF