பல்லவன் விரைவு ரயில் திருச்சியிலிருந்து இயக்க கோரிக்கை - ரயில்பயணிகள் பாதுகாப்புக்குழுவினர் பேட்டி
ரயில் பயணிகள் பாதுகாப்புக்குழுவினர் கடந்த 17ம்தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு ரெயில்நிலையங்களில் தூய்மை, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பயணிகளின் கருத்துக்களைப் பெற்று ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் நிறைவாக இன்று திருச்சி ஜங்சன் ரெயில்நிலையத்தில் ரெயில் பயணிகள் பாதுகாப்புக்குழுவினர் நடைமேடை, காத்திருப்பு அறை, ஐஆர்சிடிசி பயணிகள் தங்குமிடம், கழிப்பறை, உணவகங்களில் ஆய்வுசெய்ததுடன் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா மற்றும் குறைகள் உள்ளனவா என்றும் பயணிகளிடம் கேட்டறிந்தனர்.
திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களில் தூய்மையாகவும், பயணிகளுக்கான பாதுகாப்பு, அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக செய்யப்பட்டிருப்பதாக குறிப்பாக திருச்சி ரெயில்நிலையம் சிறப்பாக உள்ளது. பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களும் நல்ல முறையிலேயே உள்ளது.
அதேநேரம் திருச்சி முதல் தஞ்சை வரையிலான குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்கவும், திருச்சியிலிருந்து பல்லவன் விரைவு ரயிலை இயக்குவது உள்ளிட்ட திருச்சி பயணிகளின் பல்வேறு கோரிக்கைகளை 27ம் தேதி டெல்லியில் நடைபெறும் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO