மரம் ஏற்றி சென்ற லாரி இரு சக்கர வாகனம் மீது மோதி 2 பேர் பலி - ரயில்வே டிராக்குள் புகுந்த லாரி

மரம் ஏற்றி சென்ற லாரி இரு சக்கர வாகனம் மீது மோதி 2 பேர் பலி - ரயில்வே டிராக்குள் புகுந்த லாரி

திருச்சியிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு மரங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது முத்தரநல்லூர் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் லாரி கட்டுபாட்டை இழந்து இடதுபுறமாக உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் திருச்சி காட்டூரை சேர்ந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ரயில் தண்டவாளத்துக்கு அருகே லாரியிலிருந்த மரதுண்டுகள் சரிந்து விழுந்தன. இதனை அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அருகே ரயில் பாதை உள்ளது. அதிகாலையில் நடந்த விபத்தில் லாரி சாலை ஓரம் இருந்த ரயில்வே இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு ரயில் தண்டவாளத்தின் அருகே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக தண்டவாளத்தில் விழாமல் அருகில் விழுந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து லாரி உரிமையாளர் மீது அபராதம் விதித்து ள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO