திருச்சியில் எசென்ஸ் கடையில் எலி, கரப்பாண்பூச்சிகள் - அதிர்ச்சி - சீல்
பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சிராப்பள்ளி மாவட்டம் அல்லிமால் தெருவில் உள்ள ஒரு மொத்த எசென்ஸ் விற்பனையாளர் கடை மற்றும் குடோன் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், இப்ராஹிம், பாண்டி மற்றும் வசந்தன் ஆகியோர் கொண்ட குழுவால் அந்த கடை ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது, அந்த கடை மிகவும் சுகாதாரமற்றதாகவும், அந்த கடை மற்றும் குடோன் குப்பை கிடங்கு போல் இருந்ததாலும், பெரும்பாலான உணவு பொருட்கள் காலாவதி ஆகியும், அங்கு எலிகள் கரப்பாண்பூச்சிகள் வந்து செல்லும் வண்ணமும் இருந்தது. உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் எதையும் பின்பற்றாமலும் இருந்தது கண்டறியப்பட்டு அந்த கடை மற்றும் அவர்களுடைய குடோன் சீல் செய்யப்பட்டது.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும், பொதுமக்களும் இதுபோன்று தங்களது பகுதி அருகில் காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற உணவு பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
புகார் எண் : 99 44 95 95 95 / 95 85 95 95 95
மாநில புகார் எண் : 9444042322
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision