பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத்துறை மாணவர் வலுதூக்கும் போட்டியில் முதலிடம்

பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத்துறை மாணவர் வலுதூக்கும் போட்டியில் முதலிடம்

திருச்சிராப்பள்ளி வலுதூக்கும் சங்கம் சார்பில்  மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத் துறை இரண்டாம் ஆண்டு படிக்கிறார் மாணவர் நவீன். 300 பேர் கலந்து கொண்ட  மாவட்ட அளவிலான போட்டியில் 93 கிலோ எடைப்பிரிவில்   30 பேர் இடம் பெற்றனர்.

அதில் பிஷப் ஹீபர் கல்லூரி வரலாற்றுத் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் நவீன் 588  கிலோ எடையை தூக்கி முதலிடம் பெற்றார். வலுதூக்கும் சங்கத்தினர், மாணவனை பாராட்டும் விதத்தில் தங்கப்பதக்கமும் , கோப்பையும் சான்றிதழும் கொடுத்து பாராட்டினர். முதலிடம் பெற்ற மாணவனை, வரலாற்றுத் துறை மாணவர்கள் வாழ்த்தியுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn