திருச்சியில் அரசுக்கு ஐந்தரை கோடி இழப்பு ஏற்படுத்திய கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் ரெய்டு
திருச்சி கூட்டுறவு கட்டுமான நாணய சங்க செயலாளராக 2016- 2017ல் கார்மேகம் என்பவர் பணியாற்றி வந்தார் .திருச்சி அண்ணாநகர் உக்கிர காளியம்மன் கோவில் பகுதியில் 3000 சதுர அடி நிலத்தை அரசு நிர்ணயித்த விலைக்குக் குறைவாக 150 ரூபாய்க்கு சங்க உறுப்பினர்கள் 7 பேருக்கு விற்றதில் ஐந்தரை கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தகவலறிந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் அவர் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி செல்வநகர் அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது 2 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் பணம் 45 பவுன் நகை மற்றும் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய கார் ஆகிய அவர் வீட்டில் இருந்தது. இவற்றை ஆவணங்களாக பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் திருச்சி கருமண்டபம் மத்திய கூட்டுறவு வங்கியில் செயலாளராக உள்ளார். 2016- 2017ல் இச்சங்கத்தின் தலைவராக மோகன் (அதிமுகவை சேர்ந்தவர்) இருந்துள்ளார். அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்த விலை 3,000 ரூபாய் சதுரடி. ஆனால் அதன் தனியார் மதிப்பு 6000 ரூபாய் வரை என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn