திருச்சி மக்களுக்கு தீபாவளி வெடியால் வந்த வினை

Nov 14, 2023 - 12:18
Nov 14, 2023 - 15:36
 1026
திருச்சி மக்களுக்கு தீபாவளி வெடியால் வந்த வினை

தீபாவளி பண்டிகை நேற்று முன் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருச்சியில் கடைவீதிகள், திருமண மண்டபங்கள் என 80க்கும் மேற்பட்ட இடங்களில் உரிமை பெற்று பட்டாசு விற்பனை நடைபெற்றது. இந்த நிலையில் உரிமம் பெறாமல் திருச்சி மாநகரில் சிலர் பட்டாசுகள் விற்பதாக கிடைத்த தகவலின் படி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் 10 பேர் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது திருச்சி மக்கள் வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். திருச்சி மாவட்ட தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் 19 இடங்களில் பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் தேவதான பகுதியில் சரவெடி வெடித்த போது தீப்பொறி அந்த பகுதியில் இருந்த கழிவு பிளாஸ்டிக் குடோனில் விழுந்து தீ மழமழவென எரிந்து பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இதே போல் திருச்சி காஜாபேட்டை பகுதியில் பட்டாசு வெடித்ததில் அருகில் இருந்த இரண்டு குடிசைகள் தீப்பற்றியது. சமயபுரம், அண்ணா நகர், லால்குடி ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்ததில் குடிசைகள் தீப்பற்றி எரிந்தன. மேலும் லால்குடி உள்ளிட்ட மூன்று இடங்களில் ராக்கெட் பட்டாசு விழுந்து மூன்று தென்னை மரங்கள் தீ பிடித்து எரிந்து சாம்பலாயின.

அதேபோன்று மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் பேரூராட்சிக்கு உட்பட்ட கணபதி நகரச் சேர்ந்த சரஸ்வதி என்பவரது வீட்டில் தீப்பிடித்தது. தீபாவளி பண்டிகின்போது காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் இரவு 7:00 மணி முதல் 08:00 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறதா என போலீசார் சோதனை ஈடுபட்டனர். அப்போது அனுமதித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக மாநகரில் 16 பேர் மீதும், புறநகரில் 55 பேர் மீதும் என மொத்தம் 71 பேரும் இது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்

குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடினர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சிறு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்காக அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றனர். நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகை போது ஒரே நாளில் மட்டும் திருச்சி மாவட்டம் முழுவதும் பட்டாசு வெடித்த போது 50க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர். இதில் 21 பேர் திருச்சி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision