திருச்சியில் பாஜக ரோடு ஷோவிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி
திருச்சி சாலை ரோடிலிருந்து சி.எஸ்.ஐ வரை பாஜக ரோட் ஷோவிற்க்கு உயர்நீதிமன்றம் அனுமதி
1.5 கிமீ அளவிற்கு மாலை 5 மணி முதல் மாலை 7 வரை ரோட் ஷோ நடத்த அனுமதி- நீதிபதி
பாஜகவின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாஜகவின் முக்கிய தலைவர்களும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் இன்று பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். தொடர்ந்து இன்று மாலை 04.30 மணி முதல் 7 மணி வரை திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை ரோட் ஷோ நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முறையாக அனுமதி கோரி மனு அளித்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் தேசிய தலைவரான ஜேபி நட்டா திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து மலைக்கோட்டை வரை ரோட் ஷோ நடத்த அனுமதி வழங்குவதோடு, போதிய காவல்துறை பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்..
இந்த வழக்கு அவசர வழக்காக இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி முரளிசங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது.
உதவி தேர்தல் அலுவலர் தரப்பில், " ரோட் ஷோ நடத்துவதற்காக அனுமதி கோரப்பட்டிருக்கும் இடம்,அதிக அளவில் வியாபார கடைகள் மற்றும் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இதன் காரணமாக காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆகவே அதிகமான கூட்ட நெரிசல் உள்ள இடமாக இருப்பதால் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்பதால் மனுதாரரின் கோரிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது
இதனையடுத்து நீதிபதி திருச்சி, கண்ணப்பா ஹோட்டல் பகுதியில் இருந்து சிஎஸ்ஐ மருத்துவமனை சாலை பகுதியில் 1.5 கிமீ அளவிற்கு மாலை 5 மணி முதல் மாலை 7 வரை ரோட் ஷோ மூலமாக பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision