ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் புரோக்கர் கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் புரோக்கர் கொலை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு பெரியார் மணியம்மை நகரை சேர்ந்தவர் முகமது ரவி இவரது மகன் முகமது ஷரீப் (35). இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆகவும், வாகனங்களை வாங்கி விற்கும் புரோக்கராகவும் வேலை பார்த்து வந்தவர். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த செல்வம் என்ற ஒரு ஆன்லைன் சூதாட்டகாரரோடு தினமும் இரவு எட்டு மணி அளவில் ஈடுபடுவதாகவும், அப்பொழுது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரூ.43 ஆயிரத்தை முகமது ஷெரிப் இழந்ததாகவும், அதன் பிறகு கடந்த நாலைந்து நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பொழுது ரூ.50,000 இழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பணத்தை செல்வத்திடம் கொடுக்காமல் முகமது ஷெரிப் இருந்துள்ளார். இந்த நிலையில் செல்வம் இது குறித்து அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான சாத்தையனின் மகன் கார்த்திக்கிடம் கூறியுள்ளார். உனது நண்பர் ஆன்லைன் சூதாட்டம் ஆடி பணத்தை இழந்துள்ளார். அந்த பணத்தை தராமல் உள்ளார். அதனை பெற்று தருமாறு கூறியதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் கார்த்திக் (45) முகமது ஷெரீப்பிடம் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பணத்தை செல்வத்திடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனால் கார்த்தி கேட்கும் முகமது ஷெரீப்பிடம் கடந்த 19ம் தேதி இரவு கார்த்திக், முகமது ஷரீப் மற்றும் ஒருவர் என மூன்று பேர் ஜிபில் அமர்ந்து மது அருந்திய போது கூறியுள்ளார்.

இதனால் முகமது ஷெரிப்பிற்கும் கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு கைகளப்பாகி உள்ளது. இந்த நிலையில் கார்த்திக் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். முகமது ஷெரீப் தனது நண்பர்கள் 4 பேருடன் கார்த்திக் வீட்டிற்கு சென்று தகராறு செய்த பொழுது கார்த்திக் மற்றும் அவரது அண்ணன் காளிதாஸ் ஆகிய இருவரும் வீட்டிலிருந்த அருவாளை எடுத்து முகமது ஷெரிப்பை 9 இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதைப் பார்த்த முகமது ஷெரீப் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முகமது ஷெரிப் படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் பற்றி துவாக்குடி போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முகமது ஷெரிப்பை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சையும், பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முகமது ஷெரீப் நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்வழக்கு சம்மந்தமாக கார்த்திகையும், அவரது அண்ணன் காளிதாசையும் துவாக்குடி போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது அது கொலை வழக்காக மாற்றி விசாரணை செய்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது துவாக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision