அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - குழந்தைகள் உட்பட 30 பயணிகள் காயம்

Apr 9, 2023 - 10:47
 1176
அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - குழந்தைகள் உட்பட 30 பயணிகள் காயம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு அரசு அல்ட்ரா டீலக்ஸ் சொகுசு பேருந்தும், மற்றும் சாதாரண கட்டண பேருந்தும் பயணிகளுடன் சென்னை நோக்கி புறப்பட்டது.

அப்போது முன்னால் சென்ற அரசு சொகுசு பேருந்து சஞ்சீவி நகர் அருகே திடீரென பிரேக் அடித்ததால் பின்னால் வந்த மற்றொரு அரசு சொகுசு பேருந்து மீது மோதியது. இதில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்தால் திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் அரசு பேருந்து இரண்டும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு கொண்டு சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn