இயற்கையை ரசிக்க திருச்சியில் செம்ம ஸ்பாட் !

இயற்கையை ரசிக்க திருச்சியில் செம்ம ஸ்பாட் !

தமிழ்நாட்டின் இதயமாக கருதப்படும் மத்திய மாவட்டமான திருச்சியை சுற்றி ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில், உங்கள் வார விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க ஒரு சூப்பரான இடம் இருக்கிறது.அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இடம்தான் புளியஞ்சோலை.

சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டதால் குற்றாலம் உள்ளிட்ட பல அருவிகளும், இயற்கை தளங்களும் செயற்கைகளால் நிரம்பிவிட்ட நிலையில் இன்னும் இயற்கை அழகு மாறாமல் காடும், மலையும், அருவியும், நீரோடையும் கொண்ட அழகிய பகுதிதான் புளியஞ்சோலை.பெயருக்கு ஏற்றார்போலவே அது ஒரு சோலைதான். கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளால் நிரம்பி இருக்கும் திருச்சியில் வாழும் மக்கள் ஒருநாள் நகர பரபரப்புகளுக்கு விடைகொடுத்துவிட்டு ஜாலியாக புளியஞ்சோலைக்கு ஒரு ட்ரிப் சென்று வரலாம். மலையேற்றம் செல்ல பிடிக்கும், ஆனால் பயமாக இருக்கிறது என்று சொல்பர்கள் புளியஞ்சோலைக்கு வந்தால் எளிதில் மலையேறலாம். அது ஒரு பயிற்சியாகவும், அழகிய அனுபவமாகவும் அமையும்.

புளியஞ்சோலைக்கு நிச்சயம் செல்ல வேண்டும். கொல்லி மலையின் அடிவாரமான புளியஞ்சோலையை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளன. இங்குள்ள மலைக் குன்றுகளின் மீது எளிதில் ஏறி அமரலாம். விளையாடலாம். அதை தாண்டி பித்துக்குளி குகைக்கு நடந்து சென்று சுகத்துடன் சுவாரஸ்யத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம். திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் இருந்து புளியஞ்சோலை செல்ல 27 கிலோ மீட்டர் தொலைவாகும்.

திருச்சியில் இருந்து துறையூருக்கு ஏராளமான பேருந்துகள் செல்கின்றன. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுமார் 79 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த புளியஞ்சோலை அமைந்து உள்ளது. செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை புளியஞ்சோலையின் அழகை முழுமையாக அனுபவிக்கலாம்.

திருச்சி மாவட்டத்தின் உற்சாகப் பயணத்துக்கான சுற்றுலாத் தலமான புளியஞ்சோலையில்தான் கொல்லிமலையிலிருந்து கொட்டும் அருவி காட்டாறாக வேறொரு பரிணாமம் எடுக்கிறது. இதன்பின்பு, அருகில் உள்ள கிராமங்களின் வழியே ஓடிச் செல்கிறது.இந்த புளியஞ்சோலையின் சிறப்பு என்னவென்றால் அங்கு இருக்கின்ற அமைதி தான். மேலும் இங்குள்ள மூலிகை செடிகளானது அரிய வகை நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.

எனவே இந்த மூலிகைகளை சுவாசித்த படி சென்றாலே அனைத்து நோய்களும் குணமாகிவிடும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை.இந்த புளியஞ்சோலையில் பித்துக்குளி குகை என்பது மக்கள் மத்தியில் பிரபலம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த குகையானது அமைந்திருக்கிறது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இங்குள்ள இயற்கையான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த இடத்திற்கு அனுமதி இலவசம் என்பதால் சுற்றுலா பயணிகள் மிஸ் செய்யவே கூடாத இடமாக மாறி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision