என்.டி.ஏ கூட்டணியில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஐ ஜே கே இரண்டு தொகுதிகளை கேட்கும் - பாரிவேந்தர் திருச்சியில் பேட்டி
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர்
செய்தியாளர்களை திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் சந்தித்தார்... பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியிலுள்ள 6 சட்டமன்ற தொகுதியில் 33 திட்டங்களை மைய அரசு கொடுத்த 17 கோடியே 10லட்சம் முழுமையாக செலவிட்டுள்ளேன். தனது பாராளுமன்ற தொகுதியில் 5ஆண்டுகளில் 1800 மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்துள்ளேன். நான் ஒரு தேசியவாதி தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் கேட்போம் ஒன்று பெரம்பலூர் மற்றொன்று கள்ளக்குறிச்சி. 50 ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த அரியலூர் - பெரம்பலூர் - நாமக்கல் ரயில்வே இருப்புபாதை திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து மத்திய அரசிடம் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். அத்திட்டத்தை விரைவில் துவங்கும் நிலையில் உள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் தினமும் கொலை, கொள்ளை சர்வ சாதரணமாக நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதி போலீஸ்காரர் கையிலும், மீதி பாதி கட்சிக்காரர் கையிலும் உள்ளது. திமுக அரசு செய்யத் தவறியது என்று குறிப்பிடும்போது மாநிலச் சாலைகள், கிராம சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.
மகளிர் உரிமை தொகை திட்டம் திமுகவிற்க்கு பெரிய அளவில் பலனை தராது. எதிர்க்கட்சிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தாது என குறிப்பிட்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision