அணை கட்டுவோம் சிவக்குமார் ! தடுப்பாரா ஸ்டாலின் ?
மேகதாது அணை இருந்தால், காவிரியில் இப்போது நிலவும் தண்ணீர் பிரச்னை இருந்திருக்காது' என்று கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்தார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் டிகே சிவக்குமார் நேற்று கூறியதாவது... மேகதாது அணை இருந்திருந்தால், தண்ணீர் பிரச்னை இவ்வளவு தீவிரம் அடைந்திருக்காது. வறட்சி காலங்களில் மேகதாது அணை மூலம் தண்ணீரை பங்கிட்டுக் கொள்ள முடியும்.
மேகதாது அணை விவகாரத்தை சட்ட ரீதியில் சுப்ரீம் கோர்ட்டிலும், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்திலும் முன் வைக்க உள்ளோம். டிகே சிவக்குமார் இதுதொடர்பாக அனைத்து சட்டப்போராட்டங்களையும் முன்னெடுத்து, மேகதாது அணை விரைவில் கட்ட கர்நாடகா அரசு முயற்சி செய்யும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.
காவிரியில் தமிழகத்துக்கு வரும் 15ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த செப்டம்பர் 29ம் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து ஆணையத்தில் கர்நாடகா அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் டிகே சிவக்குமார் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு அதிக தண்ணீர் வருகிறது.
இதனால் அந்த அணையின் நீர்மட் டம் 100 அடியை தாண் டியுள்ளது. எனினும், கர்நாடகா இன்னும் மேலாண்மை ஆணைய உத்தரவை சரியாக பின் ற்றவில்லை. அணை கட்டுவோம் என காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த துணை முதல்வர் அட்டித்துக்கூறுவதால் அதனையும் மீறி INDIA கூட்டணியில் ஸ்டாலின் சேர்வாரா அல்லது ஜெயலலிதா பாணியில் 39 தொகுதியிலும் தனித்து களம் காண்பாரா என்பதுதான் தமிழக மக்களின் இப்பொழுதைய மில்லியன் டாலர் கேள்வி !.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision