கழிவறைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் - வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் தலைவர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்..... திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் மார்க்கெட் எதிரே மணிக்கூண்டு அருகில் உள்ள மாநகராட்சி ஊழியர்கள் கட்டணம் வசூலித்து பராமரித்து வரும் இரு கட்டண கழிவறைகள் கடந்த ஒரு வார காலமா பூட்டி கிடக்கிறது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்களை கேட்டால் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அலட்சியமாகபதில் கூறுகிறார்கள்.
காந்தி மார்க்கெட் மணி கூண்டில் மீன் மார்க்கெட்டை ஒட்டியே கழிவறைகள் இருப்பதால், அந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே திருச்சி காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு டைமண்ட்ஜூப்ளி அருகில் உள்ள கழிவறைகளை உடனே திறக்க வேண்டும். மேலும் காந்தி மார்க்கெட்டில் உள்ளே உள்ள 2 கழிவறைகளையுட சுத்தமாக பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் கழிறைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம் நடத்துவோம்.
காந்தி மார்க்கெட் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்ட புதிய மீன் மார்க்கெட்டை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision