திருச்சியில் சுங்கச்சாவடி சேதம் எம்எல்ஏ உள்ளிட்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சியில் சுங்கச்சாவடி சேதம் எம்எல்ஏ உள்ளிட்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளும், அரசியல் பிரதிநிதிகளும் கோரிக்கையாக வைத்து வருவதுடன் அடிக்கடி போராட்டங்களையும் அறிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினர். அதில் ஒரு பகுதியாக திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும், மணப்பாறை எம்எல்ஏ-னமான அப்துல் சமது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திருச்சி, தஞ்சை, நாகை, அரியலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வேனில் வந்தவர்களுக்கு சுங்க கட்டணம் வசூலித்து தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியினர் சாவடியை அடித்து நொறுக்க போவதாக கூறியதால் போலீசார் சமரசம் செய்து அந்த சுங்க கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்தனர்.

பின்னர் சுங்கச்சாவடி முன்பு அப்துல் சமது தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிலையில், மனித நேய மக்கள் கட்சியினர் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வரும் பகுதியில் உள்ள சுங்கசாவடி கண்ணாடி, கேமரா, வாகன தடுப்பு கட்டைகள் உடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று முற்றுகையிட்டு

நடந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லாமல் கூடியது, சுங்கச்சாவடி சேதப்படுத்தியது என இரண்டு பிரிவுகளில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது உள்பட 300 பேர் மீது இரண்டு பிரிவின் கீழ் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision