விவசாய முன்னேற்ற சங்கத்தினர் நடத்திய பி.ஏ.சி.எல் முதல் மாநில மாநாடு

விவசாய முன்னேற்ற சங்கத்தினர் நடத்திய பி.ஏ.சி.எல் முதல் மாநில மாநாடு

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தொட்டியத்தில் விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. விவசாய முன்னேற்றக் கழக நிறுவனத்தலைவர் செல்வ.இராசாமணி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாடு பி.ஏ.சி.எல் முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் இணைந்து நடத்திய முதல் மாநில மாநாட்டிற்கு விவசாய முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளர் கா.பாலசுப்ரமணியன்,

அரசியல் உயர்மட்ட தலைவர் முன்னாள் ஆசிரியர் ராமசாமி, மாநிலப் பொருளாளர் ராமசாமி, மாநில துணைத்தலைவர் ஆர்.எஸ். சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்ப தலைவர் மாதவன், மாநில அமைப்பு செயலாளர் ரவிச்சந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் எஸ். ரவிச்சந்திரன் உள்பட பல்வேறு மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த மாநாட்டில் சிறப்புரை நிகழ்த்திய விவசாய முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் செல்ல.இராசாமணி பேசியதாவது... நாடு முழுவதும் பிஏசிஎல் நிறுவனத்தில் ஏறத்தாழ 5 கோடியே 85 லட்சம் நபர்கள் 49 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்கள். தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி முதலீட்டாளர்கள் 10 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார்கள்.

இந்த நிறுவனம் செயல்படுவதற்கு உச்சநீதிமன்றம் (02.02.2016)-ல் தடைவிதித்து முதலீட்டாளர்களுக்கு ஆறு மாத காலத்திற்குள் அசலுடன் வட்டியும் சேர்த்து பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துக்களை விற்று, 640 துணை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பணத்தை கைப்பற்றி முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்ப்பளித்து 8 வருடம் ஆகியும் இதுவரை வழங்கப்படவில்லை. முதலீடு செய்துள்ளவர்களில் பலர் வயது மூப்பின் காரணாக இறந்துள்ளார்கள். பல இடங்களில் முதலீட்டாளர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில், ஆட்சிக்கு வந்தவுடன் இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தனி கவனம் செலுத்தி பணத்தை வழங்குகிறோம் என்று எந்த கட்சி தேர்தல் வாக்குறுதி அறிவிக்கின்றதோ அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்போம். இல்லை என்றால் வேறு வழி இல்லாமல் எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கின்ற வகையில் 2024 பாராளுமன்ற பொது தேர்தலை தமிழகத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள், முதலீட்டாளர்கள் பல லட்சக்கணக்கான விவசாய குடும்பத்தினர் வாக்களிக்காமல் புறக்கணித்து, வாக்காளர் அட்டையும் ஆதார் அட்டையும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்க உள்ளோம்.

மேலும் நெல்லுக்கு 4 ஆயிரம் ரூபாய் குயின்டாலுக்கும், கரும்புக்கு டன்னுக்கு 6 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட வேண்டும்.  வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் சுவாமிநாதன் கமிட்டியை அமல்படுத்த வேண்டும் நாமக்கல் மாவட்டம் வலையப்பட்டி புதுப்பட்டியில் அமைய உள்ளே சிப்காட் தொழிற்பேட்டை முடிவை திரும்ப பெற வேண்டும். நாமக்கல் கரூர் மாவட்டத்திற்கு இடையே காவிரி ஆற்றின் குறுக்கு தடுப்பணை கட்டுவதற்கு கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் இந்த அரசு ரத்து செய்துள்ளது.

மீண்டும் மறுபரிசீலனை செய்து அறிவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 72 கோரிக்கைகளை வலிறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். முக்கியமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும். அதற்கு மாற்றாக பனை, தென்னை விவசாயிகளை ஊக்குவிக்கின்ற வகையில் கல் இறக்கி சந்தைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று பேசினார். இந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision