புதிய வகுப்பறை மற்றும் கழிவறை கட்டி கொடுத்த திருச்சிராப்பள்ளி கோட்டை ரோட்டரி சங்கம்

புதிய வகுப்பறை மற்றும் கழிவறை கட்டி கொடுத்த திருச்சிராப்பள்ளி கோட்டை ரோட்டரி சங்கம்

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் பள்ளக்காடு மான்ய நடுநிலைப்பள்ளி ஆஸ்பெஸ்டாஸ் கூரையை அகற்றி அற்புதமாய் நான்கு வகுப்பறை தலைமை ஆசிரியர் அறையுடன் 2018ல் வழங்கியது. திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம் மணிகண்டம் ஒன்றியம் நாச்சி குறிச்சி மான்ய தொடக்கப் பள்ளி ஓட்டுக் கட்டிடத்தை ஒட்டுக் கட்டிடமாக மாற்றி மூன்று வகுப்பறை கட்டிடம் சமையல் அறையுடன் 2021ல் வழங்கியது.

திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம் கோட்டை ரோட்டரியின் கொடைகள் பள்ளியோடு நிற்கவில்லை. படித்த மாணவர்கள் அரசு வேலைக்கு செல்வதற்காக மணிகண்டம் ஒன்றியம் புங்கனூர் ரோட்டரி படிப்பு மையக் கட்டிடம் கட்டப்பட்டு 2022இல் திறக்கப்பட்டுள்ளது. TNPSC, UPSC தேர்வுகள் எழுத தேவையான நூல்கள் உள்ள நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இணைய வசதியுடன் Smart TVயும் வைக்கப்பட்டு உள்ளது. ஏழை மாணவர்கள் இலவசமாக படித்து அரசு வேலைக்கு செல்வதற்கு இப்பயிற்சி மையம் பேருதவியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் மேக்குடி லெட்சுமிமான்ய தொடக்கப்பள்ளியில் திருச்சிராப்பள்ளி கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையை அகற்றி கான்கிரீட் மூன்று வகுப்பறை & மாணவர்கள் கழிவறையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

கொடையின் கரங்கள் அன்றும், இன்றும் என்றும் கல்வியை நோக்கி நீளும் வரை தமிழ் வழிப் பள்ளிகள் தழைத்தோங்கும். தமிழ் மொழியின் மாண்பும் மரபும் மகிழ்வோடு காக்கப்படும். மகிழ்வோடு அழைகின்றோம். பேருந்து செல்லாத ஊருக்கும் கல்விக்கான கரம் நீண்ட கருணையின் சிறப்பினை கட்டிடமாக காண வாருங்கள். கனிவோடு கல்வி பெறக் காத்திருக்கும் குழந்தைகள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision