தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் துறையூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள 1 பொருளியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மாணாக்கர்களின் நலன்கருதி தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட உள்ளது.

காலிப்பணியிடம் விவரம் :

1. முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நிலையில் 01 காலிப்பணியிடம்

மாதாந்திர தொகுப்பூதியம் :

1. முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நிலையில் 18,000/-

கல்வித் தகுதி மற்றும் முன்னுரிமை :

1. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்

2. பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள்(இல்லையெனில்).

3. பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள்(இல்லையெனில்)

4. மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்)

5. அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள்

விண்ணப்பிக்கும் முறை :

1. விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ / அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். (முகவரி: மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி.)

கால வரம்பு : விண்ணப்பதாரர்கள் (08.07.2024) மாலை 05:00 மணிக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டியது. மேற்படி கால நிர்ணயத்திற்கு பின்பு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision