திருச்சியில் காவலர்கள் மது அருந்தியதாக SFI வீடியோ வெளியீடு-காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்- SFI ஐ நிர்வாகியை கண்டித்த எஸ்பி

திருச்சியில் காவலர்கள் மது அருந்தியதாக SFI வீடியோ வெளியீடு-காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்- SFI ஐ நிர்வாகியை கண்டித்த எஸ்பி

திருச்சியில் காவலர்கள் மது அருந்தியதாக SFI வீடியோ வெளியீடு - காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் - SFI நிர்வாகியை கண்டித்து எஸ்பி 

திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தினமும் இரவு மது அருந்துபவர்களுடன் காவலர்களை பிடித்து காவல் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் தோழர்கள் ஒப்படைத்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் காவலர்கள் பள்ளி மைதானத்தில் மது அருந்தியதாக திருவரம்பூர் SFI State Deputy Secretary தவறான தகவல் கொடுத்தாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தகவல் தெரிவித்துள்ளார்.திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூர் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று (31.03.2025) இரவு 23.30 மணிக்கு

காட்டூர் பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் மது அருந்தி கொண்டிருந்ததாக SFI-யின் மாநில துணைச் செயலாளர் மோகன் குமார் என்பவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.உடனடியாக திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸார் மேற்படி பள்ளி மைதானத்திற்கு சென்று பார்த்த போது அங்கு நான்கு நபர்கள் இருந்துள்ளனர். அதில் இருவர் மது அருந்தியும், மற்ற இரு நபர்கள் மது அருந்தாமலும் இருந்துள்ளனர். அதில் ஒருவர் மணிகண்டம் காவல் நிலைய முதல்நிலை காவலர் (2038)இளையராஜா என்பவர் என தெரிய வந்துள்ளது. மேற்படி காவலர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதனாலும், மேற்படி நபர்கள் அவரது நண்பர்கள் என்ற வகையில் தற்செயலாக அப்பகுதிக்கு சென்று வகையில் பேசிக்கொண்டிருந்துள்ளார் என போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

நான்கு நபர்களை (காவலர் உட்பட) காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மூச்சு பகுப்பாய்வு சோதனை செய்தபோது 1) மகேஸ்வரன் 42/25, த.பெ. தங்கராஜ், பாரி நகர், காட்டூர் (கார் டிரைவர்). 2) பிரபு 41/25, த.பெ. ராஜு, பாரதிதாசன் நகர், 6-வது தெரு, வடக்கு காட்டூர் (ரயில்வே ஊழியர்) ஆகிய இருவரும் மது அருந்தி இருந்ததாகவும், 3) வினோத் 41/25. த.பெ.தர்மலிங்கம், பெரியார் நகர், வடக்கு காட்டூர் (கார் டிரைவர்) மற்றும் 4) மணிகண்டம் காவல் நிலைய முதல்நிலை காவலர் 2038. இளையராஜா ஆகிய இருவரும் மது அருந்தியதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என தெரிய வந்தள்ளது.

மது அருந்தியிருந்த மகேஸ்வரன் மற்றும் பிரபு ஆகிய இருவர்கள் மீது மட்டும் பொது இடத்தில் மது அருந்திய ( . 164/25 u/s 4(1)(c) TNP Act, dt: 31.03.25 இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து பிணையில் விடப்பட்டுள்ளனர்.விசாரணையின் போது குறிப்பிடப்பட்ட SFI கட்சி உறுப்பினர் மணிகண்டம் காவல் நிலைய காவலர் இளையராஜா பள்ளி மைதானத்தில் மது அருந்திகொண்டிருந்தாக தவறான தகவலை அளித்துள்ளதாகவும், அவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும். காவல் துறையின் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்தில் இதுபோன்ற தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பியதாக தெரியவந்தது எஸ்.பி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் காவலர் இளையராஜா இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் மது அருந்திய நபர்களுடன் பேசிக்கொண்ருந்த காரணத்தினால் அவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம் திருச்சி மாவட்ட ஆயுதப்படைக்கு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision