தொட்டியம் மதுரை காளியம்மன் திருவிழா -போலீசார் கொடி அணிவகுப்பு

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு 31.03.2025 ம் தேதி மாலை 5 மணி அளவில் திருச்சி மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், அவர்களின் உத்திரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்டு ADSP Tr.கோபாலசந்திரன், DSP Tr.சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர்கள் ஞானசேகர் (தொட்டியம்) ,Tr.முத்தையன் (துறையூர்) உட்பட 270க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்ட அணிவகுப்பு
தொட்டியம் மேல தெருவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு காவல் நிலையம், தட்டாரத் தெரு,எடத்தெரு, வெங்கடேஸ்வரா தியேட்டர், அழகு நாச்சியம்மன் கோவில் தெரு, சந்தைப்பேட்டை காமன் தெரு, நாராசன் தெரு,பவளக்கடை வீதி, தெற்கு ரத வீதி
வழியாக வானப்பட்டறை 05.45 மணியளவில் வந்தடைந்தனர்.இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision