மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கை - தீயணைப்பு துறையினர் திருச்சியில் ஒத்திகை!!

மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கை - தீயணைப்பு துறையினர் திருச்சியில் ஒத்திகை!!

திருச்சி மாவட்ட வருவாய்த் துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் மழைக் காலங்களில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்கான ஒத்திகை தத்துரூபமாக செய்து காட்டினர். 

மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் சிக்கிய படகு மற்றும் உயிர்காக்கும் கருவிகள் கொண்டு மீட்பது எப்படி தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்டு அவர்களுக்கு வழங்கக்கூடிய  முதலுதவி சிகிச்சையை அளிப்பது ஆகியவற்றை செய்து காட்டினர். மேலும் பயனற்ற பிளாஸ்டிக் கேன்,கயிறு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பேரிடர் காலங்களில் எவ்வாறு தற்காத்துக் கொள்வது எனவும் விளக்கமளித்தனர். ஆற்றில் சிக்கி  கொள்பவர்களை மீட்பது  அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, செயற்கை சுவாசம் வழங்குவது, மருத்துவமனைக்கு கொண்டு செல்வது ஆகியவை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். 

Advertisement

மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கின் போது தரை பாலத்தை கடக்க வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மழைக்காலங்களில்  சாதாரண பொருட்களைக் கொண்டு தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து  ஒத்திகை பார்த்து பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மேற்கு வட்டாட்சியர் குகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.