திருச்சி ஸ்பா சென்டரில் தொடரும் பாலியல் தொழில்- உரிமையாளர், 7 பெண்கள் உட்பட 10 பேர் கைது!!

திருச்சி ஸ்பா சென்டரில் தொடரும் பாலியல் தொழில்- உரிமையாளர், 7 பெண்கள் உட்பட 10 பேர் கைது!!

திருச்சியின் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர் ஏற்கனவே 5 மசாஜ் சென்டர்கள் கண்டறியப்பட்டு அதிலிருந்து பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகிறது.

திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள ஸ்பா சென்டரில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு வந்த புகாரின் பேரில், சோதனை மேற்கொண்ட விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஸ்பா சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஸ்பா சென்டர் உரிமையாளர் ஸ்ரீதர், மேலாளர் ரஞ்சித், வாடிக்கையாளர் ஒருவர் என மூன்று குற்றவாளிகள், பாதிக்கப்பட்ட ஏழு பெண்கள் என மொத்தம் பத்து பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து ஸ்பா சென்டர் மூடப்பட்டது. திருச்சியின் பிரதான சாலையில் இதுபோன்ற ஸ்பா சென்டரில் பாலியல் தொழில் நடைபெற்று வந்தது பகுதி நிறைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.